ஒருமுறை கவலையுடன் இருந்த தாய் யசோதையைக் கண்ட கிருஷ்ணர்,ஏனம்மா! வருந்துகிறாய்? என்று கேட்டார்.மகனே! என் மனதில் நீண்ட நாளாக ஒரு ஏக்கம். அந்த நினைப்பில் உன்னைக் கண்டதும் கண்ணீரும் வந்து விட்டது. தேவகி வயிற்றில் நீ பிறந்தாலும், உன்னை வளர்க்கும் பாக்கியம் பெற்றேன். ஆனால், உன் மணக்கோலத்தைக் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போனதே! என்றாள். கவலைப்படாதீர்கள் அம்மா! வரப் போகும் கலியுகத்தில் நான் திருமலையில் சீனிவாசனாக அவதரிக்கும் போது, நீங்களே என் தாயாகும் பேறு பெறுவீர்கள். அப்போது உங்கள்தலைமையில் என் கல்யாண வைபவம் விமரிசையாக நடக்கும், என்றுஉறுதியளித்தார். அதன்படி, திருமலை திருப்பதியில் யசோதை வகுளாதேவியாகவும், கிருஷ்ணர் சீனிவாசராகவும் அவதரித்தனர். திருப்பதி கோயில் மடப்பள்ளியில் வகுளாதேவி சந்நிதி இருக்கிறது.மடப்பள்ளி நாச்சியார் என்று இவர்அழைக்கப்படுகிறார்.நாச்சியார் என்பது மருமகளான லட்சுமியைக் குறிக்கும். ஆனால், திருப்பதியில் மாமியாரான வகுளாதேவிக்கும் இப்பெயர் வழங்கப்படுகிறது. வகுளாதேவிக்கு இரவு ஒருவேளை மட்டுமே நைவேத்யம் நடக்கிறது.