பதிவு செய்த நாள்
14
மே
2015
11:05
குறிச்சி: லோகநாதபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோவில் விழா முன்னிட்டு, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. சுந்தராபுரத்தை அடுத்த லோகநாதபுரம், முதலியார் வீதியிலுள்ள கோவிலில், விழா நேற்று முன்தினம் இரவு, அம்மன் திருக்கல்யாணத்துடன் துவங்கியது. நேற்று காலை, குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரக ஊர்வலம் பொள்ளாச்சி மெயின் ரோடு, சங்கம் வீதி, சாரதா மில் ரோடு வழியாக, கோவிலை சென்றடைந்தது. மாலையில், மாவிளக்கு வழிபாடு நடந்தது. முன்னதாக, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று, மஞ்சள் நீராட்டுடன் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை மதியம், சிறப்பு வழிபாட்டுடன், விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.