பதிவு செய்த நாள்
14
மே
2015
11:05
ஆர்.கே.பேட்டை: அப்பரடிகள் உழவார மன்றத்தினர் சார்பில், மூன்றாம் ஆண்டு, குரு பூஜை, நேற்று முன்தினம் நடந்தது. பொதட்டூர்பேட்டை அப்பரடிகள் உழவார மன்றம் சார்பில், அப்பர் சுவாமி குரு பூஜை, மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு, அகத்தீஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன், குரு பூஜை துவங்கியது. காலை, 8:00 மணிக்கு செந்தமிழ் வேள்வியும், 9:00 மணிக்கு அப்பர் சுவாமிக்கு, திருமஞ்சனமும் நடந்தது. பகல், 1:00 மணிக்கு, குருவராஜபேட்டை நால்வர் உழவார மன்றத்தினர் சார்பில், அப்பர் சுவாமிக்கு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மாலை, 4:00 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, பன்னிரு திருமுறை, திருப்புகழ், திருவருட்பா உள்ளிட்ட தமிழ் வேத நுால்கள் முன்னெடுத்து செல்ல, சிவ பூத கண வாத்தியங்கள் முழங்க, அப்பர் சுவாமிகள், யானை வாகனத்தின் மீது வீதியுலா எழுந்தருளினார்.