பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
05:07
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனிச் சன்னதி அமைந்த சில கோயில்கள்.
1. ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை) ஆத்மநாதர் கோயில் - மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்த தலம்.
2. மதுரை திருவாதவூர் - மாணிக்கவாசகர் பிறந்த ஊர்
3. சின்னமனூர் (தேனி மாவட்டம்) - தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் பொருட்டு அமைக்கப்பட்ட கோயில். இங்கு மாணிக்கவாசகரே மூலவர். சிவன், அம்பாள் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர்.
4. உத்தரகோசமங்கை மங்களநாதர் - சிவன், மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை உபதேசித்த தலம்.
5. சிதம்பரம் நடராஜர் - மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல இறைவனே, திருவாசகத்தை எழுதிய திருத்தலம். சிவனுடன் மாணிக்கவாசகர் ஐக்கியமான இங்கு, தில்லைக்காளி கோயில் அருகில் இவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.