நான்கு வேதங்களையும், பதினெட்டு புராணங்களை இயற்றியவர் வேதவியாசர். மகாபாரதத்தை இவர் சொல்லச்சொல்ல, விநாயகரே எழுதினார் என்கிறது புராணம். இவருக்கு முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் சிலை இருக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்து, இடது கையில் ஏடும், வலது கையில் சின்முத்திரையும் காட்டியபடி இருக்கிறார் இவர். வியாசர், இங்கு முருகனை வழிபட்டதாகவும், அதன் அடிப்படையில் சிலை அமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.