பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2015 11:05
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கரா தேவி கோவிலில், வைகாசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் தலைமையில், யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்ற கோரி, வெற்றிலையில் எழுதி யாக குண்டத்தில் கொட்டி யாகம் வளர்க்கப்பட்டது. யாககுண்டத்தில் ஏராளமான புடவை மற்றும் துணிகள் சாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பல்வேறு பழ வகைகள், பால், தயிர், நெய் போன்றவை யாக குண்டத்தில் கொட்டப்பட்டு தீபாராதனை நடந்தன. ஸ்ரீ பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகும்பலா யாகத்தில் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.