தியாகதுருகம்: பல்லகச்சேரி செல்லியம்மன் கோவிலில் மண்டல பூஜை துவங்கியது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரியில் நுõற்றாண்டு பழமைய õன செல்லியம்மன் கோவில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புணரமைக்கப்பட்டு, கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூ ஜைகள் நடக்கிறது. தினமும் மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் செய்து மகாதீபாராதனைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜைகள், ஊர் நாட்டாமைதாரர்கள் தலைமையில் நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.