திருக்கனுார்: செட்டிப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு மேட்டுத் தெருவில் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா கடந்த 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று 19ம் தேதி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடக்கிறது. திரவுபதியம்மன் , முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழா மாலை 6:00 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்குகிறது.