பனைக்குளம்: அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில்1008 விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக மூலவர்களுக்கு 18 வகை அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுவாமிகள் மல்லிகைப்பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் விளக்குபூஜை நடந்தது. பஜனை, அர்ச்சனை நாமாவளி, சக்தி ஸ்தோத்திரம் பாடப்பட்டன. அழகன்குளம் அழகியநாயகி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரத்தினம் குழுவினர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் ர்மராஜ், பூசாரி லட்சுமணன், மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.