பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் ஆண்டுபராமரிப்பு பணியில் "சாப்ட் உள்ளிட்ட முக்கிய பாகங்களை சென்னையை சேர்ந்த இன்ஜினியர்கள் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்கின்றனர். பழநிமலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ""ரோப்கார்" இயக்கப்படுகிறது. இது தற்போது ஆண்டுபராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளன. கம்பிவடக்கயிறுகள், பெட்டிகள், மேல் மற்றும் கீழ்தளத்திலுள்ள "சாப்ட்கள் மற்றும் உருளை, சக்கரங்கள் கழற்றப்பட்டுள்ளது. அவற்றில் தேய்மானம் உள்ளதா, மீண்டும் பயன்படுத்தலாமா என்பதை கண்டறிய சென்னையிலுள்ள "ஸ்கேன்ட்ரி மெட்டாலிஜிக்கல் சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்த இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2013ல் ரோப்காரில் ஷாப்ட் பழுதாகி பெட்டிகள் 200அடி அந்தரத்தில் தொங்கியது. ஆகையால் ரோப்கார் இயக்கத்தின் முக்கிய பாகமான "சாப்ட்டின் உறுதி தன்மையை ""அல்ட்ராசோனிக் பிளே டிடெக்டர்"என்ற கருவி மூலம் ஆய்வு செய்கின்றனர். இவர்களது பரிந்துரையின்பேரில் தேய்மானமடைந்த, பழுதான உதிரிப்பாகங்கள் புதிதாக மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.