பதிவு செய்த நாள்
20
மே
2015
12:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 39ம் ஆண்டு வெள்ளி சிம்மவாகன மண்டகப்படி இன்று நடத்தப்படுகிறது. இதையொட்டி, நகராட்சி முன்புறம் அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்து புஷ்ப அலங்காரத்துடன் மாரியம்மன், மாவடியான் திருவீதி உலா வருவதை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, 7.15 மணிக்கு பல்லக்கு, 10.30 மணிக்கு அபிஷேகம், மதியம், 12 மணிக்கு அன்னதானம், 12.30 மணிக்கு மதிய விருந்து நடக்கிறது. இரவு, 7 மணிக்கு மாரியம்மன் கோவில் முன்புறம் இருந்து வெள்ளி சிம்ம வாகனம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 7.30 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 9 மணிக்கு சிறப்பு அழைப்பாளர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 25ம் தேதி முதல், 27ம் தேதி வரை நகராட்சி அலுவலகம் முன் அமைக்கப்பட்ட பந்தலில் நீர்மோர், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கரூர் நகராட்சி வெள்ளி சிம்ம வாகன மண்டகப்படி கமிட்டி செய்துள்ளது.