பதிவு செய்த நாள்
21
மே
2015
11:05
நகரி: காமாட்சி சமேத சதாசிவ ஈஸ்வரர் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்துார் மாவட்டம், புத்துார் டவுனில் உள்ள காமாட்சி சமேத சதாசிவ ஈஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, இன்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கி, வரும், 30ம் தேதி வரை, ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இம்மாதம், 27ம் தேதி, ரத உற்சவமும், 28ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தேதி நேரம் உற்சவம்
மே 21 காலை 6:00 கொடியேற்றம் மாலை 6:00 சந்திரபிரபை
மே 22 மாலை 6:00 யாளி வாகனம்
மே 23 மாலை 6:30 அம்ச வாகனம்
மே 24 மாலை 6:00 நாக வாகனம்
மே 25 மாலை 6:00 நந்தி வாகனம்
மே 26 மாலை 6:00 கஜ வாகனம்
மே 27 காலை 10:00 ரத உற்சவம்
மே 28 காலை 10:00 திருக்கல்யாணம் மாலை 6:00 அஸ்வ வாகனம்
மே 29 மாலை 6:00 கல்பவிருட்ச வாகனம்
மே 30 காலை 9:30 கொடியிறக்கம்