ஊத்துக்கோட்டை: வீராஞ்சநேய சுவாமி கோவிலில், 40ம் ஆண்டு, அனுமன் ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு நடந்த தீமிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பென்னலுார்பேட்டை அடுத்த, வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது வீராஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவில், அனுமன் ஜெயந்தி விழா, இந்தாண்டு, கடந்த 13ம் தேதி துவங்கியது. தினமும், காலை, 7:00 மணிக்கு, மூலவர் வீராஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, தீமிதி திருவிழா நடந்தது. இதில், வெலமகண்டிகை, பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். வரும் 22ம் தேதி வரை, இவ்விழா நடைபெறும்.