பழநி: முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழநி திருஆவினன்குடி கோயிலில் திருப்புகழ் சங்கீத சபா சார்பில் வைகாசி கிரிவிழா நடந்தது. விழாவில் சபா தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். திருப்பூர் மாஸ்டர் சந்தோஷ் கீபோர்டு இன்னிசையும், பக்திசொற்பொழிவு, பக்தி இன்னிசை, பாட்டுமன்றம் நடந்து. திருமுருகன் இசையரங்கம் என்ற திருப்புகழ் பாட்டு கச்சேரி பழநி சிவ.ஆறுமுகம், சேதுரத்னம், ராஜமூர்த்தி, பாப்பம்பட்டி கண்ணன் ராஜன் குழுவினர் பாடினர். ஏற்பாடுகளை திருப்புகழ் சங்கீத சபா நிர்வாகிகள் செய்தனர்.