தஞ்சாவூர்: தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள், 14.23 லட்சம் ரூபாய் கணக்கை செலுத்தி உள்ளனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்கு அடுத்தப்படியாக புகழ்பெற்றது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, மாதந்தோறும் எண்ணப்படும். திருவாரூர் உதவி கமிஷனர் சிவராம்குமார், தஞ்சை உதவி கமிஷனர் ரமணி ஆகியோர் முன்னிலையில், சுயஉதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 14 லட்சத்து, 23 ஆயிரத்து, 17 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.