திருநள்ளார் கோவிலில் ரூ.4.76 கோடி மதிப்பில் க்யூ காம்ப்ளக்ஸ்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 01:05
காரைக்கால்: திருநள்ளார் சனிபகாவன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.4.76 கோடி மதிப்பில் க்யூ காம்ப்ளக்ஸ் பணிகள் முடியும் நிலை உள்ளது. விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவரகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால், நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் தினம் திருநள்ளாரில் குவிகின்றனர். இதனால் பக்தர்கள் வசதிக்காக கோவில் நகர திட்டத்தில் மூலம் க்யூ காம்ப்ளக்ஸ் கட்டும் பணிகள் நடைபெற்றது. நளன் குளத்தில் நீராடிவிட்டு தர்பாரண்யேஸ்வரர் கோவில் செல்லும் வழியாக சுமார் 750 மீட்டர் அளவில் ரூ.4.76 கோடி செலவில் பக்தர்கள் வரிசையில் செல்லும் வகையில் வணிகவளாகம், கழிவறை, ஒய்வுகூடம் மற்றும் தண்ணீர்,மின்விசிறி உள்ளிட்ட வசதிகள் கட்ட ப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் கூறுகையில். திருநள்ளார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக க்யூகாம்ப்ளக்ஸ் ரூ.4.76 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இருப்புறம் 2 வரிசையாக பக்தர்கள் அமர்ந்து செல்ல கட்டைகள், ஒரு ஒய்வு அறை சுமார் ஆயிரம் போர் அமரக்குடியது, 10 வணிகவளாகம், கேன்டீன், டிக்கெட்கவுண்டர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கொண்டது.மேலும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது விரைவில் பக்தர்களுக்காக க்யூ காம்ப்ளக்ஸ் கட்டிடம் திறக்கப்படும் என்று கூறினார்.