புனித சவேரியர் ஆலயத்தில் மண், மழை வளம் சிறக்க தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2015 02:05
திருவாரூர்: திருவாரூர் அருகே பழையபலம் புனித சவேரியர் ஆலயத்தில் மண், மழை வளம் சிறக்க இரவு துவங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நேற்று காலை ஆலயத்தை வந்தடைந்தது. திருவாரூர் அருகே காரையூர் பங்கு பழையவலத்தில் 300 ஆண்டுகளுக்கு மேற் பட்ட புனித சவேரியர் ஆலயம் உள்ளது. வறட்சி ஏற்பட்ட போது அப்பகுதி யினர் இந்த ஆலயத்தில் வந்து மக்கள் படும் துயத்தை நேரில் வந்து பார் என வேண்டி, கண்ணீர் விட்டு கதறி அழுததால், சவேரியர் நேரில் மக்கள் துயர த்தை போக்கியதால், புனித சவேரியருக்கு மே 23ம் தேதி தேரோட்டம் நடத்து வதை ஐதீகமாகவும், மே மாதம் 15ம் தேதி கொடியேற்றி சிறப்பு வழிபாடு நட த்தி தேரோட்டம் நடத்து வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றி தினசரி சிறப்பு வழி பாடு நடத்தினர்.நேற்றுமுன் தினம் இரவு பங்குத் தந்தை ஜான்கென்னடி தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பின் இரவு 10 மணி துவங்கிய தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று காலை 8.00 மணி வரை நடந்தது. அப்பகுதியினர் மற்றும் அருட்திரு கன்னியர்கள் பலர் சுண்டல் வழங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.\