பதிவு செய்த நாள்
26
மே
2015
12:05
கோபி: கோபி அக்கரைகொடிவேரி அணை முனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில், 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை ஒன்பது மணிக்கு மேல் கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தனபூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. காலை, 11 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மாலை ஆறு மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்துசாந்தி, ரஷாபந்தனம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது. வரும், 30ம் தேதி அணை முனீஸ்வரனுக்கு இரண்டாம் கால யாக பூஜை துவக்கம், சீதள பரமேஸ்வரி கோவிலில் இருந்து பட்டண பிரவேஷம், மாலை ஆறு மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, வேதசிவாகம் பாராயணம் நடக்கிறது. வரும், 31ம் தேதி அதிகாலை நான்காம் காலயாக பூஜை துவக்கம், நாடிசந்தானம், அதிகாலை, 5.30 முதல் 6.30 மணிக்குள், விமான கோபுரத்துக்கும், பரிவார தெய்வங்களுக்கும், ஆஞ்சநேய சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா அபிஷேகம், விஷேச அலங்கார பூஜைகள் முடிந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, அக்கரைகொடிவேரி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.