சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா நடந்தது. மன்ற துணை தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், பாலசுப்ரமணியன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாராயணன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், வேலா சிவஞான அடிகள், செட்டியந்தூர் சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முருகன் நன்றி கூறினார்.