ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் வைகாசித் திருவிழா கடந்த, 10ம் தேதி பூச்சொறிதல் விழாவுடன் துவங்கியது. 17ம் தேதி காப்புக்கட்டுதல் நடைபெற்றது. 18ம் தேதி கேடயத்திலும், 22ம் தேதி யாழி வாகனத்திலும், 23ம் தேதி அன்ன வாகனத்திலும், 24ம் தேதி வெட்டுங்குதிரை வாகனத்திலும் ஸ்வாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். நேற்று மாலை, முத்துமாரியம்மன் பெரிய தேரிலும், வாழவந்த பிள்ளையார், பேச்சியம்மன் ஸ்வாமிகள் சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். சுற்று வட்டார கிராமங்களில், தேர்கள் வலம் வந்தன. இன்று தீர்த்த திருவிழா நடைபெறுகிறது.