அரங்கநாதபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2015 11:05
திட்டக்குடி: வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திட்டக்குடி அடுத்த வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நேற்றுமுன்தினம் மாலை வாஸ்துசாந்தி பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. பூஜைகளை வரதசிங்காச்சாரியார் நடத்தினார். வரும் ஜூன் 1ம் தேதி விசாக திருத்தேர் விழாவும், 2ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் முருகன், தக்கார் ஜெயசி த்ரா, மற்றும் பட்டாச்சாரியார் ராகவன், கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.