Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அழகர்கோவில் யாகசாலை அமைக்கும் ... ராமேஸ்வரத்தில் தீர்த்த கட்டண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கோயிலில் தகவல் மையம் திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2011
11:07

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக ஒருங்கிணைந்த தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சண்முகவிலாச மண்டபத்தில் நேற்று இதனை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் திறந்துவைத்தார். கோயில் நடை திறப்பு, பூஜை நேரம், வழிபாட்டு முறைகள், தரிசன கட்டணங்கள், தங்கும் விடுதி விவரங்கள் போன்றவையும், அருகிலுள்ள முக்கிய கோயில்களின் விவரங்களையும் இதில் பக்தர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், வெளியூர்களுக்கு செல்லும் பஸ், ரயில் நேரம், கட்டண விவரத்தையும் அறிந்துகொள்ளலாம். இணை ஆணையர் பாஸ்கரன் கூறும்போது, பக்தர்களுக்காக, இங்கு 2.85 கோடி ரூபாய் செலவில் சாமான்கள் பாதுகாப்பு அறையுடன் கூடிய கந்த சஷ்டி விரத மண்டபம் கட்டப்படவுள்ளது. மேலும், நாழிக்கிணறு பஸ்ஸ்டாண்ட் அருகில் 92 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் கூடிய பக்தர்களுக்கான தங்கும் அறை கட்டப்படவுள்ளது. அதே பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 81 லட்சம் ரூபாய் செலவில் 20 அடி அகலத்தில் காங்கிரீட் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படவுள்ளது. கோயிலுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் பாதுகாக்கப்படவுள்ளன. கோயில் யானைக்கு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar