வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அன்னதானம், வண்டி வேஷம் நடந்தது.கடந்த செவ்வாய் அன்று பூச்சொரிதலுடன் ஆரிய வைசியர் மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவில் பூப்பலக்கில் வீதி உலா வந்தார். நேற்று முன் தினம் மாவிளக்கு அக்கி சட்டி, பொங்கல் படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பிலீஸ்புரம் பொதுமக்கள் சார்பில் நடந்த அன்னதானத்தை தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை முன்னிலை வகித்தனர். வக்கீல் பிரிவு அமைப்பாளர் சரவணன், கவுன்சிலர் துரைப்பாண்டியன் பங்கேற்றனர்.நேற்று ஊர்காலசாமி கோயில் தெரு, 14வது வார்டு பொதுமக்கள் சார்பில் முளைப்பாரி நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டியன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் எம்.பி., உதயகுமார் துவக்கி வைத்தார். புதுப்பட்டி, காமராஜபுரம், பிலீஸ்புரம் பகுதியினர் சார்பில் வண்டி வேஷம் நடந்தது.