பராசர முனிவருக்கு தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி என்று ஆறு புதல்வர்கள். நெறிதவறி வாழ்வு நடத்திய இப்பிள்ளைகள் தந்தையின் சாபத்திற்கு ஆளாகி மீன்களாக உருமாறினர். சரவணப் பொய்கையில் அவதரித்த குழந்தை முருகனுக்கு பராசக்தி ஞானப்பால் அளித்த போது அவரின் வாயில் பால் ஒழுகியது. அதைக் குடித்த, பராசரரின் புதல்வர்கள் சாபம் நீங்கப் பெற்றனர். அதன்பின் திருப்பரங்குன்றம் வந்து, முருகனை நோக்கி தவம் செய்து நற்கதி பெற்றனர். இதனால். திருப்பரங்குன்றத்திற்கு பராசர க்ஷேத்திரம் என்று பெயர் இருக்கிறது.