பதிவு செய்த நாள்
02
ஜூன்
2015
11:06
புதுச்சேரி: கதிர்காமம், கதிர்வேல் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, ௧08 பால்குட அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் ÷ நற்று நடந்தது. வைகாசி விசாக திருவிழா, காலை 7.30 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனம், பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முத்துமாரியம்மன் ÷ காவிலில் இருந்து, 108 பால்குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மாட வீதிகள் வழியாக, கதிர்வேல் சுவாமி கோவிலை வந்தடைந்தது. காலை 9 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகம், 108 பால்குட அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. பின், மகா தீபாராதனையும், பி ரகார உற்சவமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, உற்சவதாரர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.