திருவள்ளூர்: காரியசித்தி கணபதி கோவிலில், வரும் 5ம் தேதி, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. பஞ்சேஷ்டியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தில், காரியசித்தி கணபதி ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி அன்று, இங்கு சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, காரியசித்தி கணபதிக்கு சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ அலங்காரத்தில் ககார சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். இரவு 7:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறும்.