விழுப்புரம்: விழுப்புரம் அருகே முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் நடந்தது. விழுப்புரம் அடுத்த அன்னியூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் நடந்தது. விழாவை யொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. பழங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் வேல்முருகன், அன்னியூர்சிவா, தர்மகர்த்தா அய்யனார், விழாக்குழு தலைவர் சண்முகம், திருமால், சண்முகம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.