கோவையில் இருந்து காரமடை செல்லும் வழியில், சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குருந்த மலை. முனிவர்களுக்கெல்லாம் குருவாகத் திகழ்ந்தவர். மாமுனி எனப் போற்றப்பட்டவர் அகத்தியர். அவர் தவம் செய்து பூஜித்து வணங்கிய தலம் குரு இருந்த மலை எனப்பட்டு. பிறகு காலப்போக்கில் மருவி, குருந்தமலை என்றானது. இங்கு தான் குழந்தை வேலாயுதசுவாமி அருள்பாலிக்கிறார். அருணகிரிநாதர், இவரைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். சுமார் 1200 வருடப் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தை சஷ்டி நன்னாளில், வணங்குவது மிகவும் நல்லது. இங்கு நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர், ராஜகம்பீர விநாயகர், சப்த கன்னியர், ராஜ நாகலிங்கம், வீர ஆஞ்சநேயர் ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.