ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு திருக் கல்யாண மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணப் பட்டன. இப்பணியில் ஸ்ரீபர்வ வர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.55 லட்சத்து 33 ஆயிரத்து 260 ரொக்கம், 49 கிராம் தங்கம் , 3 கிலோ 380 கிராம் வெள்ளி நகைகள் கிடைத்தன. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், மேலாளர் லட்சுமி மாலா, கட்டுமானப்பணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர்கள் ககாரின் ராஜ், ராஜாங்கம், பேஷ்கர்கள் அண்ணாதுரை, கமலநாதன் பங்கேற்றனர்.