மதுரை : உசிலம்பட்டி அருகே ஜூன் 5,6,7ல் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் பெரியகும்பிடு கிடா வெட்டு திருவிழா நடத்த அனுமதிக்ககோரி மதுரை கலெக்டர் சுப்பிரமணியனிடம் 50 கிராமத்தினர் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: திருவிழாவிற்காக தெய்வத்திற்கு கிடா வளர்த்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் சம்மதித்து மண் எடுத்து கொடுத்து கொல்லிமலைராக்கு, பிரமகுல ராக்கு தெய்வங்களுக்கு மண் சிலை செய்து தயார் நிலையில் உள்ளது. நாடு முழுவதுமிருந்தும் இத்திருவிழாவிற்காக மக்கள் வந்துள்ளனர். விழா ரத்து ஆனால் தெய்வ குற்றமாகி சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படும். மக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். பெட்டி, சிலை எடுத்து விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்றனர்.