ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ராயவேலூரில் வினைதீர்க்கும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் விழாவில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் ஹோமம் வளர்க்கப்பட்டு முதல், இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பொதுமக்கள் சார்பில் பால்குடம் எடுத்து வந்து 11 வகை திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை ராயவேலூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.