பதிவு செய்த நாள்
05
ஜூன்
2015
11:06
சேலம் : சேலம், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், தட்சிணாமூர்த்திக்கு நேற்று நடந்த வெள்ளிக் கவச சாத்துப்படியில், திரளாக பக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், தட்சிணாமூர்த்தி வார வழிபாட்டு குழுவின் சார்பில், நேற்று வெள்ளிக் கவச சாத்துப்படியை முன்னிட்டு, காலையில் ஐங்கரப் பெருமான் வேள்வி வழிபாடு, ஆலமர் செல்வராம் தட்சிணாமூர்த்தி வழிபாடு ஆகியன நடந்தது.சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்காரம் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு, வெள்ளிக் கவச சாத்துப்படியில், பேரொளி வழிபாடு நடத்தப்பட்டது. மதியம், 12 மணிக்கு அன்னம் பாலிப்பு, அன்னதானம் நடத்தப்பட்டது.மாலையில், பன்னிரு திருமுறை மன்றத்தினர் சார்பில், திருமுறை பாராயணமும், இரவில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.