சொரக்காய்பேட்டை: பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டையில், பக்தர்களின் பங்களிப்புடன், புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த பணிகள், கடந்த வாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கின. நேற்று காலை 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. காலை 9:40 மணியளவில், மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.