திருப்பதி: அஞ்சல் மூலம் கோதாவரி புஷ்கர நீரை அனுப்ப ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரம் என்றழைக்கப்படும் மகாமகப் புனித நீராடுதல் விழாவை ஆந்திர அரசு நடத்துவது வழக்கம்.வரும் ஜூலை 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை கோதாவரிபுஷ்கரம் நடைபெற உள்ளது. அதன் நீரை அஞ்சல் மூலம் அனுப்ப ஆந்திர மாநில அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.அதற்காக ஜூன் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை அருகில் உள்ள அஞ்சலகத்தில் மக்கள் பதிவு செய்து கொள்ளலாம். 500 மி.லி. பாட்டில் 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.பதிவு செய்தோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் கோதாவரி நதி தீர்த்தம் அவரவர் வீட்டிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். விவரங்களுக்கு www.appost.in/eshop என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இது ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களுக்கும் பொருந்தும்.