காரைக்கால்:காரைக்கால் படுதார்க்கொல்லை சிவகாமி அம்பாள் சமேத சோளீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி கடந்த 29ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை ஆகிய பூஜைகளுடன் தொடங்கியது.கடந்த 31ம் தேதி கோபூஜை, லஷ்மி பூஜை, ஹோமம், தீபாராதனை நடந்தது. நேற்று நான்காவது கால பூஜைகள் நடந்தன. பின் விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.