பதிவு செய்த நாள்
05
ஜூன்
2015
12:06
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தென்குமாரபாளையம் குறிஞ்சேரி மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, வரும் 7ம் தேதி நடக்கிறது. நாளை காலை 7:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மாலை 5:00 மணிக்கு அனுக்ஞை, கும்பஸ்தானம், விமான கோபுர கலசம் வைத்தல், யந்தரஸ்தாபானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும் 7ம் தேதி காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப மூர்த்தி மூலாயத்துக்கு எழுந்தருளல், காலை 9:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள், விமான கும்பாபிஷேகம், காலை 10:15 மணிக்கு, விநாயகர் மூலஸ்தான மாரியம்மனுக்கு பரிவார மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.