உளுந்தூர்பேட்டை:செங்குறிச்சி கிராமத்தில் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
பாரதம் படித்தல் நிகழ்ச்சியும், 31ம் தேதி பீமனுக்கு படையல் நிகழ்ச்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தேரினை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஸ்ரீதிரவுபதி அம்மன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை 6 மணிக்கு தீமிதித் திருவிழா நடந்தது.