விருத்தாசலம்: வைகாசி விசாக பிரம்மோற்சவ 10ம் நாளில், ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. ஒன்பதாம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. பத்தாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று காலை ராஜகோபால சுவாமிக்கு புஷ்ப யாகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு ராஜகோபால சுவாமி சமேத கோலத்தில் பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.