கடலூர்: கல்யாண ஐயனார் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கடலூர், புதுப்பாளையம், இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பூரணி - புஷ்பகலா சமோத கல்யாண ஐயனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான விழா கடந்த 7ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சாஸ்தா மூலமந்திர ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை கரம் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மகா தீபா ராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராள மான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 9:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. மாலை மஞ்சள் நீர் உற்சவமும், இரவு வீரன் படையலும் நடந்தது.