வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை வடகாசியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு யாகம், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடந்தன. சிவகாசி பி.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜீ, கங்கா சார்கோல் உரிமையாளர் ரமேஷ், கம்மவார் சங்க செயலாளர் கெங்காராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் மணிமந்திரமூர்த்தி, ரமேஷ் செய்திருந்தனர்.