மூவேந்தர்கள் தமிழகத்தை ஆட்சிபுரிந்து வந்த சமயம், அவர்களுக்குள் அடிக்கடி எல்லாத் தகராறு நிலவிவந்தது. மூவேந்தர்களும் செல்லாண்டியம்மனை வணங்கி வந்தனர். சேர, சோழ, பாண்டியன் மூவருமே செல்லாண்டியம்மன் தம் நாட்டு எல்லைக்குள் அருள்புரிய வேண்டுமென விரும்பினர். எனவே அம்மன் முப்பாகமாகப் பிரிந்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினாள். அதன்படி பாண்டிய நாடான மதுரை, சிம்மக்கல்லில் தலை பாகமும், சேர நாடான கரூர் அருகேயுள்ள நொய்யலில் உடல் பாகமும், சோழ நாடான திருச்சியருகிலுள்ள உறையூரில் கால்பகுதியான பாதமும் அமைய கோயில் கொண்டுள்ளாள். அபிஷேகத்தின்போது மட்டுமே இப்பகுதிகளை பிரத்யேகமாகக் காணலாம். மற்ற நேரங்களில் செல்லாண்டியம்மனை முழுமையான அம்மனாக அலங்கரித்து விடுவர்.