திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. குரு பரிகார ஸ்தலமாக திகழும் இக்கோவிலுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.கோவிலின் ஏழு உண்டியல்களும் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. 10.54 லட்சம் ரூபாய் ரொக்கம், 39 கிராம் தங்கம் மற்றும் 54 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது.