பதிவு செய்த நாள்
12
ஜூன்
2015
11:06
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே செருவாமணியில் காஞ்சி பெரியவாள் சங்காராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று பூஜித்த கோவில்களான இங்கு ஒரே நாளில் ஏழு கோவில் கள் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று இரண்டு கோவில்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே செருவாமணியில் காஞ்சி பெரியவாள் சங்காராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று பூஜித்த கோவில்களான புதுக்குள த்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்லப்பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார், ஸ்ரீமங்களாம்பாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர் உள்ளிட்ட பரிவாரமூர்த்திகள், ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரசன்ன வெங்கடேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என ஒன்பது கோவில்கள் அப்பகுதி அக்ரஹாத்தினர் கடந்த 1982 மற்றும் 2000 ஆண்டுகளில் புதுப்பித்து 9 கோவில்களை கும் பாபிஷேகம் நடத்தினர். 2015 ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்ய ஜெயராம ஐயர், ஸ்ரீராம் ஐயர் கொண்ட குழு அமைத்து கோவில்களில் புறணமைப்பு பணிகள் மேற் கொண்டர்.
பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 7 ம் தேதி காலை 7.00 மணிக்கு வேதா அணுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ப்ரதிஷ்டாசங் கல பம், ஸ்ரீமகா கணபதிேஹாமம், ஸ்ரீமகா லட்சுமிேஹாமம், தனபூஜை, பூர் ணாஹூதி தீபாரதனை நடந்தது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை வாஸ்த்து சாந்தி பிரவேசபலி தீபாரதனை யைத்தொடர்ந்து தினசரி பல்வேறு பூஜைகளைத்தொடர்ந்து நேற்று காலை 9.45 மணிக்கு புதுக்குள த்தங்கரை ஸ்ரீசித்திவினாயகர், முதலியார் தெரு ஸ்ரீ வீரசக்தி வினாயகர்,ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், பிடாரி, ஸ்ரீ செல்ல ப்பெருமாள் சாஸ்தா, ஸ்ரீ குறும்ப ஐயனார் ஏழு கோவில்களில் கும்பாபி ஷேக ம் நடந்தது. இதில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரகணக்கானவர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று 12ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜையைத்தொடர்ந்து 10 மணிக் கு ஸ்ரீமங்களாம்பாள் சமேத ஸ்ரீவன்மீகநாதர்,ஸ்ரீபூமி நேய மூர்த்தி சமேத பிரச ன்ன வெங்கடேச பெரு மாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் என இரு கோவில்கள் கும்பா பிஷேகம் நடக்கிறது. கோவில்களில் மேலும் பல வளர்ச்சிப்பணிகள் நடந்து வருவதால் நிதி உதவி செய்ய விரும்பம் உள்ளவர்கள் ஜெயராம ஐயர், ஸ்ரீராம் ஐயர் உள்ளிட்ட விழா குழுவினர்களை 94447113001, 093810 60401 என்ற எண்ணில் தொர்பு கொள் ளுமாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.