வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த, துர்க்கை அம்மன் சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதன் இடதுபுறம் துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.
அமாவாசை தினமான நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு யாகபூஜையும், அபிஷேக பூஜையும் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.