Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி கோவிலில் அமாவாசை உற்சவம்! திருப்பூர் பாதியில் நிற்கும் ராஜகோபுர பணி! திருப்பூர் பாதியில் நிற்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை: உளுந்தூர்பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை: உளுந்தூர்பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2015
11:06

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் சிலை, கண்டெடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுாரில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு பின்பகுதியில், ராயர் என்பவரது விவசாய நிலம் உள்ளது.

இதில், கடந்த சில நாட்களுக்கு முன், பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சிலை கிடைத்தது.அச்சிலை, சமண மதத்தைச் சேர்ந்த, 24 தீர்த்தங்கரர்களில், கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் சிலை என தெரிய வந்தது. 1,200 ஆண்டுகள் பழமையான இந்த கற்சிலை, ஐந்து அடி உயரம், மூன்று அடி அகலத்தில், தியான நிலையில் அமைந்துள்ளது .புதுச்சேரியைச் சேர்ந்த, அகிம்சை நடை அமைப்பாளர் ஸ்ரீதரன் கூறுகையில், சமணர்கள் இப்பகுதியில் வசித்துள்ளனர் என்பதற்கு, இந்த சிலை சான்றாக உள்ளது. இச்சிலையை வேறு இடத்திற்கு கொண்டு சென்று, கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம், என்றார்.

உக்கிரன்கோட்டையின் பழமை ஆய்வு:
திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே சிற்றாற்றின் வடகரையில், உக்கிரன்கோட்டை கிராமம் உள்ளது. இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு, உக்கிரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டுள்ளான். கி.பி., ஆறாம் நுாற்றாண்டு முதல், 10ம் நுாற்றாண்டு வரை, முற்கால பாண்டியர்கள் ஆண்ட இந்த பகுதியில், தொல்லியல் துறையினர், ஏற்கனவே செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுத்தனர்.கடந்த, 1970களில், மத்திய தொல்லியல் துறை சார்பில், கே.வி.சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். தற்போது, தமிழக தொல்லியல் துறையினர், ஆய்வைத் துவக்கியுள்ளனர்.

சென்னை, தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி, இயக்குனர் ரஞ்சித் தலைமையில் அகழாய்வுப் பணி நடக்கிறது.இவர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில், ஓடுகள், கூரைப் பகுதிகள், சுடுமண் சிற்பங்கள், சங்கு வளையல்கள், சீனப் பொம்மைகள் ஆகியவை, ஏற்கனவே கிடைத்துள்ளன. தற்போது நடக்கும் ஆய்வின் மூலம், உக்கிரன்கோட்டையின் முழுமையான தொன்மை குறித்து தெரியவரும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar