புதுச்சேரி: காவேரி நகர் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் 108 சங்கு ஸ்தாபனம் நேற்று நடந்தது.
ரெட்டியார்பாளையம் காவேரி நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம், முதல் கால பூஜை ஹோமம் நடந்தது. இன்று (18ம் தேதி) காலை 7: 30 மணிக்கு இரண்டாம் கால பூஜை ஹோமம், காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.