செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 1ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வருகிறது.
இதன் 46வது நாள் விழா மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்தனர். தீபாராதனையும், பிரசாத வினியோகமும் செய்யப்பட்டது.