பதிவு செய்த நாள்
19
ஜூன்
2015
11:06
புதுச்சேரி: பிள்ளைச்சாவடியில் உள்ள, சீரடி சாய்பாபா பிரார்த்தனை மண்டபத்தின் 13ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது.அன்றைய தினம் காலை 7:00 மணிக்கு, இரண்டாம்கால யாகசாலை பூஜை, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு, சிறப்பு கலசாபிஷேகம், அலங்காரம், கடலுார் நந்தகுமாரின் சாயி பஜன் நடக்கிறது.11.30 மணிக்கு, பல்லக்கு உற்சவம், 12 மணிக்கு, ஆரத்தி, மாலை 5:30 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், 6:00 மணிக்கு, ஆரத்தி,6:30 மணிக்கு, சரவணன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 7:30 மணிக்கு, கமலசாயி மின் பல்லக்கு உற்சவம், இரவு 8:00 மணிக்கு, ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, சீரடி சாயிபாபா சேவா சமிதி நிர்வாகிகள் செய்துள்ளனர்.