பதிவு செய்த நாள்
23
ஜூன்
2015
10:06
சேலம்: சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், முருகன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், செங்குந்தர் கந்த சஷ்டி விழாக்குழுவினர், 13ம் ஆண்டு குமாரசஷ்டி பூஜை, நேற்று காலை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. சண்முகர் யாகம், மகா அபிஷேகம், மலர் அபிஷேகம், தங்க கவச சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், சஷ்டி பாராயண,ம் 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு ஆகியன நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை, செங்குந்தர் கந்த சஷ்டி விழாக்குழு நிர்வாகிகள், கௌசிகன், பன்னீர்செல்வம், முருகேசன், செந்தில்நாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.