ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை 11 மணிக்கு துவங்கியது. சுவாமி, அஞ்சல்நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அடுக்கு தீபாராதனை நடந்தது. பத்துநாள் விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுத்தருள்வர். ஜூன் 28 இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஜூன் 30 காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 1ல் திருவாசகம் முற்றோதுதல், தீர்த்தவாரி நடக்கிறது.